26 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வயலில் தூக்கி வீசிச் சென்ற 3 நபர்கள் கைது

0 2657
26 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வயலில் தூக்கி வீசிச் சென்ற 3 நபர்கள் கைது

திருவாரூர் அடுத்த மன்னார்குடி அருகே 26 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, சாக்கு பையில் அடைத்து வயலில் தூக்கி வீசிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேனி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில், சாத்தனூர் கிராம பருத்தி வயலில் சந்தேகத்திற்கு இடமாக கிடந்த சாக்கு மூட்டை குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து போலீசார், சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருந்த நிலையில், அது கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கிருஷ்ணவேனி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தனியரசு, ஜெயச்சந்திரன், மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து நகைக்காக கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments