மது விருந்தில் மண் அள்ளிபோட்ட ஆவேச கடல்ராசா..! குடிமகன்களுக்கு உணர்த்துவது என்ன.?

0 12065

குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலில் அச்சிட்டு இருந்தாலும், குடிமகன்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக் கொண்டு மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி கடற்கரையில் அமர்ந்து சைடிஸ்ஸுடன் மது அருந்த தொடங்கிய நண்பர்களுக்கு கடல் அலை விடுத்த எச்சரிக்கை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மெல்லிய இரவில்... கடற்கரையோரம் அமர்ந்த நண்பர்கள் நால்வர் ஒரு பிளேட் நிறைய கிரில் சிக்கன், மற்றொரு பிளேட்டில் பரோட்டா சால்னா சகிதம் கையில் பீர் பாட்டிலுடன் தங்கள் வீக் எண்டை ரசித்து ருசிக்க ஆரம்பித்தனர்..!

ஒரு பக்கம் கடலில் இருந்து அலைகள் கரையேர எத்தணித்துக் கொண்டிருக்க மதுப்பிரியர்கள் நால்வரும் சைடுடிஸ்களை ருசித்தவாறு மெய் மறந்து மது குடிக்க தயாராகி கொண்டிருந்தனர்.

அவர்கள் மது அருந்த தொடங்குவதற்கு முன்னதாக , மது அருந்தினால் ஒரு போதும் வாழ்க்கையில் கரையேற இயலாது என்பதை அந்த குடிமகன்களுக்கு எச்சரிக்கும் விதமாக சற்று வீரியமாக கரையை நோக்கி வந்த அலை ஒன்று அந்த மதுப்பிரியர்களின் பீர் பாட்டிலை கவிழ்த்து விட்டதோடு, தட்டில் இருந்த சைடு டிஸ்களின் மீது உப்புத் தண்ணீரோடு சேர்த்து மண்ணை அள்ளிப்போட்டது..!

image

இனி குடி குடியை கெடுக்கும் என்பதற்கு பதில் , இந்த அலையை போல குடிப்பதை தடுப்போம் என்று சற்று வேகமாக முன்னெடுத்தால் தான் குடியை ஒழிக்க முடியும் போல என்று இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் நண்பர்கள் தாங்கள் வாங்கிய பீர் பாட்டிலை திறக்காததால், பீர்... உப்பு நீராகாமல் தப்பியது குறிப்பிடதக்கது.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments