இரு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி

0 4084
இரு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி

பெரம்பலூர் அருகே இரு லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிய கோர விபத்த்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்று கொண்டிருந்த கார் மீது தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் நிலைகுலைந்த கார் முன்னால் நின்ற ஈச்சர் வாகனம் மீது பலமாக மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

சம்பவத்தில் காரில் பயணித்த சீர்காழியை சேர்ந்த பைனான்சியர் முனியப்பன் மற்றும் அவரது தாய், மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக முனியப்பனின் 5 வயது மகன் உயிர் பிழைத்தான்.

சமப்வம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக பின்னால் வந்த லாரி மற்றும் கார் மோதிய வேகத்தில் ஈச்சர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதன் முன்னால் நின்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments