உக்ரைனில் தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலி...பக்தியுடன் பங்கேற்ற மக்கள்.!

0 1740

உக்ரைன் நாட்டின் சப்போர்ஷியா நகரை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ள நிலையில், அங்குள்ள தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தின திருப்பலிகளில் உக்ரைனியர்கள் பக்தியுடன் பங்கேற்றனர்.

ரஷ்ய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தி வரும் பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சப்போர்ஷியா நகரம் அமைந்துள்ளது.

அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைமை, போர் நடைபெறும் பகுதிகளில் இரவு நேரத் திருப்பலிகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது.

இருந்தபோதும், தேவாலயம் வந்தவர்களுக்கு பாதிரியார்கள் தேவாலயத்தின் வெளியே வைத்து ஆசீர்வாதம் வழங்கினர். ஒரு சிலர் மட்டுமே உள்ளே சென்று திருப்பலியில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments