கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குக் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம்

0 2122
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குக் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கொரோனா அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளவும், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

தொற்று உறுதியானால் மருத்துவத் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும், இல்லை என்றால்  உடல்நிலையைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், நெரிசலான பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி போட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments