வயிற்றில் மறைத்து ரூ.41.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்த முயற்சி.. மருத்துவ பரிசோதனையில் சிக்கிய நபர்

0 2617
வயிற்றில் மறைத்து ரூ.41.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்த முயற்சி.. மருத்துவ பரிசோதனையில் சிக்கிய நபர்

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வயிற்றில் மறைத்து 41 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடந்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து ஜெய்பூர் வந்த நபரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரது உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பைகளில் ஒன்றும் அகப்படாத நிலையில் அவருக்கு உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சி.டி. ஸ்கேனில் குடல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் கேப்சியூல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கருப்பு நிற டேப் சுற்றி இருந்த 769 கிராம் தூய தங்கத்தை மீட்ட அதிகாரிகள் நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments