கைலாசா எங்கு இருக்குது ? குறியீட்டை வெளியிட்ட நித்தி திறந்த அறையில் ரிலாக்ஸ்சாம்..! இது உனக்கே ஓவரா தெரியலையா ?

0 17638

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா , கைலாசா நாடு எங்கு உள்ளது என்பதற்கு சில குறியீடுகளை தெரிவித்து விட்டு, உடனே கூகுளில் சென்று தேடாதீர்கள் எனவும்  காவல்துறையினரை கலாய்த்துள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா கர்நாடகம் மற்றும் அகமதாபாத் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளார்.

மகா கைலாசா என்ற பெயரில் தனி நாடு, அதற்கு தங்கத்தில் நாணயம் இருப்பதாக கதை அளந்து வரும் நித்தியானந்தா சத் சங் என்ற பெயரில் தன்னுடைய கனவு நாடானா கைலாசா குறித்து அவ்வப்போது திருவாய் மலர்வது வழக்கம்.

அந்த வகையில் கைலாசாவில் உள்ள பலருக்கும் தனி தனி அறைகள் இருந்தாலும், தனது அறைக்கு மட்டும் கதவுகளே கிடையாது , 24 மணி நேரமும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் எதை பற்றி வேண்டுமானாலும் தன்னுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்று தெரிவித்தார்

கைலாசாவில் தான் தங்கி இருப்பதே ஹாலில் தான் என்றும் அங்குள்ள ஊஞ்சலில் அமர்ந்திருந்தபடியே ஒரு பக்கம் பனிபடர்ந்த மலைகளையும், மறுபக்கம் கடலையும் ரசித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் உடனே கூகுளில் சென்று பனிபடர்ந்த மலையும், கடலும் எங்கே உள்ளது என்று தேட ஆரம்பித்து விடாதீர்கள் என்று தன்னை தேடும் காவல்துறையினரை மறைமுகமாக நக்கலடித்தார் நித்தி

நம்ம நாட்டு போலீசார் சர்வதேச போலீஸ் உதவியை நாடிய நிலையிலும் தனி நாடு, தலைமறைவு , சத்சங்கம் என்று சிஷ்யைகள் சகிதம் ரிலாக்ஸ்சாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றார் நித்தி, என்பது அவர் வெளியிடும் வீடியோக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments