சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால் ஆத்திரம்.. கடையை சூறையாடி 3 பேர் தப்பியோட்டம்
சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால் ஆத்திரம்.. கடையை சூறையாடி 3 பேர் தப்பியோட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட ஆத்திரத்தில் கடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பியவர்களை கைது செய்யக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏ.கே. பிரியாணி என்ற உணவகத்தில் சுரேஷ், கட்ட அஞ்சான் உள்ளிட்ட 3 பேர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பணம் கேட்ட பெண் ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி கடையில் இருந்த உணவுப் பொருட்களை சூறையாடி தப்பியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். சுரேஷ் உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்ட வீடியோவை வைத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments