40 நாட்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் புதுவேகம் எடுக்கும் கொரோனா

0 2788

டெல்லி பள்ளிகளில் மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடனடியாக கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் அளித்து சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கை கழுவது, சானிடைசர் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் புதுவேகம் எடுக்கும் பரவலை அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பள்ளிகள் கடைபிடிக்கவேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments