இ-பைக் ஷோருமில் திடீர் தீ விபத்து.. ரூ.8 லட்சம் மதிப்பிலான இ-பைக்குகள் தீயில் கருகி சேதம்

0 2982
இ-பைக் ஷோருமில் திடீர் தீ விபத்து.. ரூ.8 லட்சம் மதிப்பிலான இ-பைக்குகள் தீயில் கருகி சேதம்

சென்னை அடுத்த குன்றத்தூரில் எலக்ட்ரானிக் பைக் ஷோருமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 மின்சார பைக்குகள் தீயில் கருகி சேதமாகின.

ராஜாராம் என்பவருக்கு சொந்தமான ஷோருமில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்ட போது பேட்டரி வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

புதிதாக உள்ள 5 பைக்குகள் மற்றும் சர்வீஸுக்கு வந்த 12 வாகனம் என 15 இரு சக்கர வாகனத்திற்கு தீ பரவி எரிந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் ஒரு  மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments