சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி.!

0 8968

உடல் நலக்குறைவு காரணமாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு துரைமுருகனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து இன்று காலை, மருத்துவமனையில் துரைமுருகனை நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். துரைமுருகன் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments