ஓசூரில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து.!

0 966

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அரியலூர் அடுத்த பெண்ணாடம் தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து சுமார் 25 டன் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் தாவணகரேக்கு லாரி சென்று கொண்டிருந்தது.

உள்ளுகுருக்கை வழியாக சென்றபோது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென டயர் வெடித்து தீ மளமளவென லாரி முழுவதும் பரவி தீப்பற்றி எரிந்து நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments