காஷ்மீரில் பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிரவாதிகள் மீது நடவடிக்கை.!

0 1116

பிரதமர் மோடி ஏப்ரல் 24 ஆம் தேதி ஜம்முவுக்கு செல்ல இருப்பதை முன்னிட்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடி  வேட்டையாடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ரமலான் மாதம் என்பதால் தீவிரவாதிகள் தாக்குதலை அதிகப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் பிரதமர் முதல் முறையாக ஜம்முவுக்கு செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments