அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம்.!

0 1615

உலகளவில் கொரியர் வர்த்தகத்தில் கோலோச்சும் அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் FedEx நிறுவனத்தின் நிறுவுனரான ஃபிரெட்ரிக் ஸ்மித் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இதையடுத்து, 5 லட்சத்து 70,000 ஊழியர்கள் பணியாற்றும் FedEx நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு ராஜ் சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்பிரமணியம் 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments