ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது ; ஜப்பான்

ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது
உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து, ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது என ஜப்பான் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யா மீது ஜப்பான் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தங்கள் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் இனிமேல் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவிலுள்ள ஆம்போல் மற்றும் விவா எனர்ஜி ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மறுத்துள்ளன.
Comments