உத்தர பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்.!

0 3682

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.

அம்மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனை அடுத்து, லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஸ்வாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் மற்றும் எம்.எல்.ஏக்கள் என மொத்த 7 பேர் சமாஜ்வாடியில் இணைந்தனர். இந்நிலையில், 144 தடை சட்டத்தை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments