காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க உத்தரவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2608

2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி 3 ஆயிரத்து 186 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோரை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைக் காவலர் நிலைகளில் மூன்றாயிரம் பணியாளர்களுக்கு 'தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்' வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 பேருக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 60 பேருக்கும் 'தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments