கர்நாடகாவில் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்து விபத்து.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 1397

கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்ததில் 20 பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மங்களூரு புறநகர் பைகம்படியில் உள்ள தனியார் கடல் உணவு மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென மீன்கள் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனம் கசிந்ததாக கூறப்படுகிறது.

பணியில் இருந்த 80 தொழிலாளர்களில் 20 பேருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments