ரயில்வே கிராஸிங்கில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

0 2356

புதுச்சேரி, விழுப்புரம் சாலையின் கண்டமங்கலம் ரயில்வே கிராஸிங்கில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையின் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் காரில் புதுச்சேரி நோக்கி வந்த போது எதிரில் இளைஞர் ஒருவர் 2 சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.

இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மோதிக்கொள்ளாமல் இருப்பதற்காக, இருவரும் வெவ்வேரு திசையில் வாகனங்களை திருப்பியுள்ளனர். இதனால் ரயில்வே கிராஸிங்கில் மோதி 2 சக்கரவாகனம் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதி அந்த இடத்தில் தொங்கியபடி காட்சியளித்தது.

மேலும் எதிரே வந்த காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments