அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி பணமோசடி ; பெண் கைது

அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி பணமோசடி
சென்னை மதுரவாயலில், அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்ச ரூபாய் வரை பணமோசடி செய்ததாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரங்கநாதனிடம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி, தன் மகனின் படிப்பிற்காக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், செல்வி அரசு குடியிருப்புகளில் வீடு வாங்கித் தருவதாகவும், ஏல சீட்டு நடத்தி பலரிடம் பணம் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் போலீசார் செல்வியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments