பொங்கல் சிறப்பு பேருந்து இன்று முதல் இயக்கம்

0 1753

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து  வழக்கம் போல் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10ஆயிரத்து 300 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  இயக்கப்படுகிறது.

இதே போல தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 6 ஆயிரத்து 468 பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே போல பொங்கல் முடிந்த பின்னர் வெளியூரில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் 18- ஆம் தேதி வரை இயக்கப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments