சான்றிதழை கோட்டாட்சியரின் பார்வைக்கு எடுத்துச் செல்ல லஞ்சம் வாங்கும் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர்..

0 2650
சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் சி.பிரிவு உதவியாளராக பணியாற்றும் கவிதா என்ற அந்தப் பெண், சான்றிதழ் ஒன்றை கோட்டாட்சியரின் பார்வைக்கு எடுத்துச் செல்ல மனுதாரர் ஒருவரிடமிருந்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் வீடியோ எடுப்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளிப்பேன் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் கூறுகிறார்.

அதற்கு தன்னிடம் எதைக் கேட்டாலும் அதற்கான கோப்புகளை எடுத்துக் காண்பித்து பதிலளிப்பேன் என்று கவிதா பதிலளிப்பது போன்று பதிவாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments