'தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் ஆபத்து..?' நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு

0 25944

தமிழகத்தில் நிறம் சேர்க்கப்பட்ட அப்பள வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளைக் கவர குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு வயிற்றுபுண், புற்றுநோய் போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கடைகளில் விற்கப்படும் 434 அப்பள மாதிரிகளை அதிகாரிகள் பகுப்பாய்வு செய்த போது 301 மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்தது. இதையடுத்து அப்பள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பள பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விவரங்கள் இல்லாவிட்டாலோ, தரக்குறைவாக இருந்தாலோ 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments