பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம்.. பிரச்சனையை தீர்க்க பேசிய போது, பஞ்சாப் முதலமைச்சர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை - ஜே.பி.நட்டா

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில், பிரச்சனையை தீர்க்க பேசிய போது, முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு சென்ற சாலையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் அரசின் இத்தகையை தந்திரங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு வேதனை தரும் விதத்தில் உள்ளதாக நட்டா சாடி இருக்கிறார். இதே போன்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments