இன்ஸ்டா இம்சைகள்.. பெண் என நினைத்து திருநங்கை மீது காதல்..! விவரம் தெரிந்து ஓடிய காதலன்

0 8849

சென்னை திருவொற்றியூர் அருகே இன்ஸ்டாகிராமில் பெண் என நினைத்து 16 வயது திருநங்கையை காதலித்த இளைஞர் ஒருவர், உண்மை தெரிந்ததும் காதலை கைவிட்டு தலைமறைவானதால் ஏமாற்றம் அடைந்த திருநங்கை உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார். 16 வயதான இந்த திருநங்கை , சில வருடங்களாக தனது குடும்பத்தை விடுத்து, ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரியா என்ற திருநங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் அண்ட்ரியா இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் 16 வயது திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆண்ட்ரியா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த 16 வயது திருநங்கையை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தற்கொலைக்கு பின்னணியில் இன்ஸ்டாவில் காதல் கோட்டை கட்டிய சம்பவம் மறைந்திருப்பது அம்பலமானது

அந்த 16 வயதுள்ள திருநங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் திருநங்கையுடன பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரில் பார்க்காமலேயே கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் உருகி உருகி காதலித்துள்ளார். நேரில் பார்ப்பதில் ஆர்வம் காட்டிய மஞ்சுநாத்திடம், தான் பெண் இல்லை ஒரு திருநங்கை என்று கூறியுள்ளார் .

அதன் பின்னர் காதலியுடன் பேசுவதை நிறுத்திய மஞ்சுநாத், தங்கள் வீட்டில் திருநங்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி பேசுவதை நிறுத்தியதாகவும், பின்னர் இன்ஸ்டாகிராமில் இருந்தும் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஏமாற்றத்துக்குள்ளான அந்த 16 வயது திருநங்கை தனது உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் காதல் என்ற குட்டிச்சாத்தான் புகுந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ஆரம்பத்திலேயே தான் பெண் அல்ல என்பதை காதலனிடம் மறைத்ததால் திருநங்கையின் உயிர் பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments