மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

0 2339

தஞ்சாவூரில், மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருளானந்தா நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி லாக்கரில் இருந்து தொன்மையான மரகத லிங்கம் மீட்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால், சிலை எந்த ஆலயத்திற்கு சொந்தமானது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு காவல் துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான போலீசார், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments