மாற்றுத் திறனாளியிடம் பணம் பறிக்க முயன்றவர்கள் கைது..!

0 2321

திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களையும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தற்காலிக பேருந்து நிலையம் அருகே வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஒருவரை மடக்கிய இரண்டு பேர் அவரிடமிருந்த பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ஹக்கீம், அப்துல் என்ற அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அதேபோல் கல்லூரி சாலை ரயில் தண்டவாளம் அருகே முட்புதரில் சந்தேகத்துக்கிடமாக சிலர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், 5 பேரை பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments