காய்கறி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து, நிலம் வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி - மேலும் ஒருவர் கைது.!

0 2041

ஈரோடு நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து, நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தேடப்படும் சங்க தலைவரும் அதிமுக பிரமுகருமான பழனிசாமியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சங்க கூட்டத்தில் 350 உறுப்பினர்களிடமிருந்து வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி தலா 70ஆயிரம் ரூபாய் நிர்வாகிகளால் வசூலிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கிய சங்க நிர்வாகிகள் அவர்களது பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நிலத்தை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து உறுப்பினர்கள் புகார் அளித்ததையடுத்து நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான பழனிச்சாமி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சங்கத்தின் பொருளாளரும் அதிமுக வார்டு செயலாளருமான வைரவேல் என்பவரை கடந்தவாரம் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பழனிச்சாமியின் மகன் வினோத் குமார் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments