தமிழகத்தில் இன்று 17வது மெகா தடுப்பூசி முகாம்

0 2011

தமிழகத்தில் இன்று 17-வது மெகா தடுப்பூசி முகாம் 50ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments