பிறந்து 5 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்த சம்பவம்.. தலைமறைவாக இருந்த பெற்றோர் கைது.!

0 3707

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை பகுதியில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண்சிசு கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தை அடித்துக்  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் பேரையூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்தனர்.

ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அக்கம்பக்கத்தினரிடம் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்துவிட்டதாக கூறி புதைத்ததும் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments