புனேயில் மின்சார வாகனங்கள் தயாரிப்புத் தொழிற்சாலையை அமைக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.!

0 2428

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேயில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

புனே ஆக்குர்தியில் அமையும் இந்தத் தொழிற்சாலை ஆண்டுக்கு 5 இலட்சம் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் உள்நாட்டு விற்பனைக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் வாகனங்களைத் தயாரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எண்ணூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு ஜூனில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments