திருப்பூரில் அரசு பேருந்தின் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.!

0 3333

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிகாலையில் அரசு பேருந்தின் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 5 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 8 நண்பர்கள் குழுவாக கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு காரில் சேலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பொத்தியபாளையம் பகுதியில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து பழனி நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் மீது கார் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில், காரில் பயணித்த செந்தில்குமார், ராஜா, பிரபு ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டிச் சென்ற இளைஞர் பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments