வாட்ஸ் அப் குழு அமைத்து ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை.. வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் கைது..!

புதுக்கோட்டையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி, தடையை மீறி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
அதில், பேருந்து நிறுத்ததில் சந்தேகத்திடமான வகையில் நின்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், வாட்ஸ் அப் குழு மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Comments