ரூ.60,000 செலவில் 4 சக்கர வாகனம் தயாரித்த நபர்... பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா

0 10026

வெறும் 60 ஆயிரம் ரூபாய் செலவில் தன் மகனுக்காக உபயோகமற்ற உலோகங்களை பயன்படுத்தி புது விதமான 4-சக்கர வாகனத்தை தயாரித்த மகாராஷ்டிராவை சேர்ந்த தத்தாத்ரேயா லோகர் என்பவருக்கு பிரபல மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அது தெளிவாக எந்த விதிமுறைகளோடும் ஒத்துப்போகவில்லை எனவும், எனினும் நம் மக்களின் புத்திக்கூர்மை மற்றும் குறைவான வளங்களை கொண்டு பெரிதாக எதையாவது செய்வது போன்ற திறமைகளை பாராட்டாமல் ஒருபோதும் இருக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

விதிகளை காரணம் காட்டி இந்த வாகனம் அங்கீகரிக்கப்படாமல் போனால் அந்த நபருக்கு அதற்கு ஈடாக பொலிரோ வாகனத்தை வழங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments