குறுக்கே வந்த கார் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டதால், ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி... ஆட்டோ ஓட்டுநர் பலி

0 3281

துரை அருகே குறுக்கே வந்த கார் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்ட மணல் லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கள்ளிக்குடியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கூத்தியார்குண்டு விலக்குப் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, ஸ்கார்பியோ கார் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

இதனால் லாரி ஓட்டுநர் கார் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்து ஒரு ஆட்டோவின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்நிலையில், ஆட்டோவின் அருகே நின்றுகொண்டிருந்த ஓட்டுநர் கோபால் மீது லாரியில் இருந்து மணல் கொட்டிய நிலையில், அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்றோரு ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments