உதகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் நிலச்சரிவை தடுக்கும் சோதனை திட்டம் தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ. வேலு

நீலகிரி மாவட்டம் உதகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் நிலச்சரிவை தடுக்கும் வகையிலான சோதனை திட்டத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.
கோத்தகிரி சாலையில் உள்ள கோடப்மந்து மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் ஆகிய இரு இடங்களில் மண் அரிப்பை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி Soil Nailing எனப்படும் மண் ஆணி அமைத்தல் மற்றும் மண் உறுதித்தன்மையை அதிகரித்து ஹைட்ரோசீடிங் எனப்படும் நீர் விதைப்பு முறை மேற்கொள்ளுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Comments