கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை? கீழே விழும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 2615

ந்திர மாநிலம் திருப்பதி அருகே கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனிவாசமங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வித்யாநிகேதன் கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், அங்குள்ள விடுதியில் தங்கி பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த வசந்தி என்ற மாணவி, நேற்று மாலை விடுதி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், அதில், மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சந்திரகிரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார், மாணவி உயிரிழப்புக்கு காரணம் தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments