விழுப்புரத்தில் தப்பட்டை இசைத்து, நடனமாடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வைரல் வீடியோ.!

0 2291

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தப்பட்டை இசைத்து, நடனமாடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஆலப்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெரினா, தப்பட்டை இசைத்தும், நடனமாடியும் சதுரம், செவ்வகம், முக்கோணம் ஆகிய வடிவங்களை பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

நடனம் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதால் மாணவர்களின் தினசரி வருகை மற்றும் பாடம் கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments