ஆபத்தை உணராமல் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

0 1685

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேனிகனிக்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மலைக்கிராமங்களிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில், இருபுறமும் உள்ள படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இதனை பின்னால் வாகனத்தில் சென்றவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாக கூறும் அப்பகுதி மக்கள், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments