விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் ; நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. வை கடுமையாக விமர்சித்த எம்.பி. ஜெயா பச்சன்

0 9752
ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரித்ததற்கு மாமியார் ஜெயா பச்சன் கண்டனம்

வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு செய்தது தொடர்பாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் 6 மணி நேரம் அமலாக்காத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு, அவரது மாமியாரும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன், விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் என நாடாளுமன்றத்தில் ப.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் போதைப் பொருள் தடுப்பு சட்டத் திருத்தம், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து கேள்வி எழுப்பிய ஜெயா பச்சன், தன்னை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வினர் தரைக்குறைவாக விமர்சிப்பதாகவும், விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments