சென்னையில் அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தி 48 லட்ச ரூபாய் மோசடி செய்த தாய் மற்றும் மகனை கைது செய்த போலீசார்.!

0 2763

சென்னை அடுத்த குன்றத்தூரில் அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தி 48 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

குன்றத்தூர் புதுநல்லூர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்த ராபியா மற்றும் அவரது மகன் சபீர் அக்தர் அகமது உள்ளிட்ட 3 பேர் அரசின் அனுமதியின்றி மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி, சீட்டு முதிர்வடைந்த பின்னரும் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராபியா மற்றும் அவரது மகனை கைது செய்த போலீசார் தலைமறைவான பக்ரூதின் என்பவரை தேடி வருகின்றனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments