சென்னை போர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!

0 2092

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன், 50ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி, விஜய் திவாஸ் என்ற தலைப்பில் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள போர்நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக, முப்படைகளின் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்து, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர். போர் நினைவுச் சின்னம் பொதுமக்கள் பார்வைக்காக காலை 10மணியில் இருந்து மாலை 5 வரை இன்று திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments