ரோட்டில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி ; காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி

0 2553
ரோட்டில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி ; காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியை மூதாட்டி ஒருவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பொள்ளாச்சி புதுத்திட்ட சாலை வழியாக நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் கீழே துப்பாக்கி மற்றும் இரண்டு கையுறைகள் இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அந்த துப்பாக்கி மற்றும் கையுறைகளை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவற்றை கைப்பற்றிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்துள்ள நிலையில், பொள்ளாச்சி பகுதியில் கூலிப்படைகள் ஏதாவது உலா வருகின்றனவா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments