ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 4ஆவது நாளாக விசாரணை

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 4ஆவது நாளாக விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானப்படை அதிகாரிகள் நான்காவது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன.
Comments