வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - அமைச்சர்

0 1776

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட வில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 14வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சத்து 45ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 83 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 51 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments