உரிய விலை கிடைக்காததால் மரத்திலேயே கனிந்து உதிரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆரஞ்சுப்பழங்கள்

0 2234

மழைக்காலம் என்பதால் உரியவிலை போகாததால் ஆரஞ்சுப்பழங்களை கொடைக்கானல் பகுதி விவசாயிகள் பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவைத்துள்ளனர்.

அடுக்கம், வெள்ளக்கெவி, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் நூறு ஏக்கர் அளவில் ஆரஞ்சு விவசாயம் நடைபெற்று வருகிறது. மழைப்பொழிவு இந்தாண்டு அதிகமாக காணப்பட்டதால், ஆரஞ்சு பழங்கள் அமோக விளைச்சலை எட்டின. இருந்தும், மழைக்காலம் என்பதால், ஆரஞ்சு விற்பனை குறைந்துள்ளது.

image

கிலோ 60 ரூபாய் வரை விற்றுவந்த ஆரஞ்சு பழங்கள், 30 ரூபாய் வரை விற்பனையாவதால், அவற்றை பறிக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். பறிக்கப்படாமல் இருக்கும் ஆரஞ்சு பழங்கள் மரத்திலேயே கனிந்து உதிரும் நிலையில் உள்ளன.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments