ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரரான பிரதீப்பின் உடல் சொந்த ஊரான கேரளாவின் திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது

0 2616

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரரான பிரதீப் அரக்கலின் உடல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த புதன்கிழமையன்று விபத்து நிகழ்ந்த நிலையில், பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தன. இந்நிலையில் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணப்பட்ட பிரதீப் அரக்கலின் உடல் கோயம்புத்தூர் அடுத்துள்ள சூலூர் விமானப் படைத் தளத்திற்கு வான் வழியாக கொண்டுவரப்பட்டது.

இதனை அடுத்து பிரதீப்பின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments