ஓடும் பேருந்தை வழிமறித்து நால்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மர்மக்கும்பல்

0 3653
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்த மர்மக்கும்பல், பேருந்தில் பயணித்த 4 பேரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்த மர்மக்கும்பல், பேருந்தில் பயணித்த 4 பேரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த நால்வர், ராமநாதபுரம் அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கிற்காக, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜாராகிவிட்டு மதுரைக்கு பேருந்தில் பயணித்தனர். அப்போது, கமுதக்குடி என்ற இடத்தில் காரில் வந்து பேருந்தை வழிமறித்த மர்மக்கும்பல், பேருந்தில் இருந்த நால்வரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதையடுத்து,ரத்தவெள்ளத்தில் மிதந்த நால்வரையும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஓடும் பேருந்தை வழிமறித்து நால்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மர்மக்கும்பல்  பின்னர், நால்வரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து, பரமக்குடி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments