காஷ்மீரில் சரக்கு லாரியில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய 52 கிலோ ஹெராயினை கைப்பற்றிய போலீசார்!

0 2205

ஜம்மு காஷ்மீரில் ஒரு சரக்கு லாரியை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்புடைய 52 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப் பொருள் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

ரகசிய தகவலையடுத்து நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் போதைப் பொருள் ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.ஸ்ரீநகரில் இருந்து பஞ்சாப்பிற்கு போதைப் பொருளை கடத்திச் செல்ல முயன்ற வாகன ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments