சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை.. கைதான 3பேருக்கு 15நாள் நீதிமன்ற காவல்..!

0 4835
சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை.. கைதான 3பேருக்கு 15நாள் நீதிமன்ற காவல்..!

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2சிறுவர்கள் திருச்சி கூர்நோக்கு இல்லத்திலும், மணிகண்டன் என்பவன் திருச்சி மத்திய சிறையிலும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பூலாங்குடி காலனி பகுதியில் ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற போது, அந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தஞ்சை மாவட்டம் கல்லணையை சேர்ந்த மணிகண்டன் என்ற 19 வயது இளைஞனும் 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிறுவர்களில் ஒருவன் நான்காம் வகுப்பும் மற்றொருவன் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருவது தெரிய வந்த து.

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான மணிகண்டன், போதைக்காகவே ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சம்பவத்தின்போது 3 பேரையும் விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், சக காவலர்களை சம்பவ இடத்துக்கு வருமாறு போனில் அழைத்துள்ளார்.

இதனால் பயந்துபோன 3பேரும் போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது முதுகுப் பக்கம் இருந்து வெட்டியிருக்கலாம் என திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் தெரிவித்தார். முன்பக்கம் இருந்து தாக்கி இருந்தால், எஸ்.எஸ்.ஐயால் தடுத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கைதான 3பேரில் ஒருவனான மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அதுபோல் 2சிறுவர்களும் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி அறிவு இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15நாள் காவலில் திருச்சியில் உள்ள கூர்நோக்கு சிறுவர் சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments